ராஜஸ்தானில் கார்- லாரி மோதலில் 5 பேர் பலி

ராஜஸ்தானில் கார் - லாரி மோதியதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2023-01-01 19:20 GMT

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டத் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிஸ்ராசர் கிராமம் அருகே வந்தபோது அந்த கார், செங்கல் ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தனர். இன்னும் ஒருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்