எறும்புத்திண்ணியை கடத்தி விற்க முயன்ற 5 பேர் கைது

சத்திஸ்கர் மாநிலத்தில் எறும்புத்திண்ணியை கடத்த முயன்ற 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

Update: 2022-12-11 14:50 GMT

அந்தகர்,

சத்தீஸ்கரின் அந்தகர் மாவட்டத்தில் எறும்புத்திண்ணியை கடத்தி விற்க முயன்றபெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அந்தகர் மாவட்டத்தில் உள்ள கோயாலிபெடா பகுதியில் எறும்புத்திண்ணியை கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்து பானுபிரதாப்பூர் கண்டி ஆற்றின் அருகே சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்தனர்.

அப்போது, வனத்துறையினர் உயிருடன் இருந்த பாங்கோலினைக் கண்டுபிடித்து ஐந்து பேரை கைது செய்தனர். குற்றவாளிகள் அதனை ரூ.10,000 க்கு விற்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரை கைதுசெய்து இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்