நட்பாக பேசி மது கொடுத்து அமெரிக்க பெண் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

பின்னர் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று மதுபானம் கொடுத்துள்ளனர்.

Update: 2023-08-04 03:04 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில், கொல்லம் அருகே உள்ள கருணாகப்பள்ளியில் ஒரு ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு 44 வயது அமெரிக்க பெண் ஒருவர் வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண், அந்த ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் நட்பாக பேசியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று மதுபானம் கொடுத்துள்ளனர். இதில் அவர் போதை தலைக்கேறி மயக்க நிலைக்கு சென்றார்.

இதையடுத்து அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று 2 வாலிபர்களும் சோ்ந்து மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்த பிறகே அந்த பெண், தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருணாகப்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அமெரிக்க பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கருணாகப்பள்ளி செரியழிக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (வயது28) மற்றும் ஜெயன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்