அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
போர்ட் பிளேர்,
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே 183 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது காலை 7:15 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Earthquake of Magnitude:4.3, Occurred on 21-06-2022, 07:15:47 IST, Lat: 10.39 & Long: 91.61, Depth: 10 Km ,Location: 183km SW of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/LIt5XJIOs5 pic.twitter.com/Vo6IvjSJYr
— National Center for Seismology (@NCS_Earthquake) June 21, 2022