இந்தியாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 59 பேர் குணமடைந்தனர்.

Update: 2023-07-27 20:05 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று அது சற்று குறைந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 434 ஆக அதிகரித்தது.

நேற்று கொரோனாவில் இருந்து 59 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 67 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 17 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,452 பேர் சிகிச்சையில் இருந்தனர். தொடர்ந்து 11-வது நாளாக நேற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்