திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள் கண்டுபிடிப்பு

போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை போலீசில் புகார் செய்தார்.

Update: 2023-04-17 00:30 GMT

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வெளியீடு, விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு, இ-உண்டியல் காணிக்ைக, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் முன்பதிவு செய்தல் ஆகியவை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருசிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதள முகவரியை தொடங்கி, அதன் மூலம் திருமலையில் சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறோம், தேவஸ்தான விடுதிகளில் அறைகளை ஒதுக்கீடு செய்து தருகிறோம், தேவஸ்தானத்தில் ேவலை வாங்கி தருகிறோம், எனக் கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அதபேரில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் செயல்பட்டு வந்த 40 போலி இணையதள முகவரிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்