ஜார்கண்டில் ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஜார்கண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-07-13 21:04 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் சட்டாகுலி கிராமத்துக்கு அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் இரவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுரங்கப்பாதையில் மண் இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் 4 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் மண் சரிவுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் நேற்று காலையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்