போதைப்பொருள் விற்பனை செய்த 4 பேர் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சூடான் நாட்டை சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-14 21:22 GMT

பெங்களூரு:-

பெங்களூரு கோரமங்களா, பானசாவடி, ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 3 பகுதிகளிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கோரமங்களா, பானசாவடி, ஹெப்பால் பகுதியில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தார்கள். கைதானவர்களில் ஒருவர் சூடான் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 4 பேரும், நைஜீரியாவை மற்றும் கேரளாவை சேர்ந்தவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி உள்ளனர். அவற்றை நகரில் உள்ள கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தது தெரிந்தது. கைதான 4 பேரிடம் இருந்து 250 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 5 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்