வாலிபர் கொலையில் 4 பேர் போலீசில் சரண்

வாலிபர் கொலையில் 4 பேர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2023-03-17 05:15 GMT

சிவமொக்கா-

வாலிபர் கொலையில்  4 பேர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்்தனர். இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரவுடி கொலை

சிவமொக்கா (மாவட்டம்) டவுனில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் அண்ணப்பா என்கிற அண்ணி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆஞ்சநேயா (வயது28) மற்றும் மது (27) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஞ்சநேயாவும், மதுவும் ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் தாவணகெரே மாவட்டத்தில் தங்கி இருந்த அவர்கள் நேற்றுமுன்தினம் காலையில் மோட்டார்

சைக்கிளில் சிவமொக்கா கோர்ட்டில் ஆஜர் ஆகினர். பின்னர் அவர்கள் நியாமதி தாலுகா கோவினகோவி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

பழிக்குப்பழி கொலை

அப்போது மோட்டார் சைக்கிளை, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. இதில் அந்த கும்பல் ஆஞ்சநேயாவையும், மதுவையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆஞ்சநேயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மர்ம கும்பல் 4 பேர் அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர்.மது ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நியாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மர்மநபர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசில் 4 பேர் சரண்

இந்தநிலையில் நேற்று சிவமொக்கா டவுனை சேர்ந்த சுனில், அபிலாஷ், வெங்கடேஷ், மற்றும் பவன் ஆகியோர் ஆஞ்சநேயா ெகாலை சம்பந்தமாக ஹாவேரி மாவட்டம் சிக்காவ் நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்