ஓடும் காருக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பெண் உட்பட 4 பேர் கைது
கேரளாவில் ஓடும் காருக்குள் 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொச்சி,
ஓடும் காருக்குள் 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மாடலிங் செய்துவருகிறார். இவர் காக்கநாட்டில் தங்கியுள்ளார். இவரை, தனது தோழியான ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துச்சென்று ஆண் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின்னர் பார்ட்டியில் மது குடித்த அவர்கள், மதுபோதையில் அந்த இளம்பெண்ணை காருக்குள் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அப்பெண்ணை அந்த கும்பல் காக்கநாட்டில் இறக்கிவிட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உட்பட நான்கு பேரை கைதுசெய்துள்ளனர்.