எலகங்காவில் 350 ஏக்கரில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா- மந்திரி முனிரத்னா தகவல்

எலகங்காவில் அடல்பிகாரி வாஜ்பாய் பூங்கா அமைக்கப்படும் என்று மந்திரி முனிரத்னா கூறினார்.

Update: 2022-09-14 16:37 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் எஸ்.ஆர்.விஸ்வநாத் கேட்ட கேள்விக்கு தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா பதிலளிக்கையில் கூறியதாவது:-

லால்பாக், கப்பன் பூங்கா மாதிரியில் பெங்களூரு எலகங்கா ஜாரகபன்டே பகுதியில் 350 ஏக்கரில் அடல் பிகாரி வாஜ்பாய் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட்டில் அறிவித்தார். அதில் சிறிது வன நிலமும் வருகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட முடியவில்லை. இதற்கு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் 307 ஏக்கர் நிலம் காப்புக்காட்டை சேர்ந்தது. இந்த நிலத்திற்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த வன நிலம் தோட்ட கலைத்துறைக்கு கிடைத்ததும், அங்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முனிரத்னா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்