சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - டாக்டருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-17 00:22 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு வெனிராம் மீனா (வயது 30) என்ற டாக்டர் பணியில் சேர்ந்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த 13 வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை டாக்டர் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் வெனிராமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பண்டி மாவட்டத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இதில், சிறுமிக்கு டாக்டர் வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, குற்றவாளி டாக்டருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து குற்றவாளி வெனிராம் சிறையில் அடைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்