இந்தியாவில் இன்று 3 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-10-01 04:26 GMT

புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாட்டில் புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக உள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,655ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,24,164-ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 38,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்