புதுச்சேரியில் விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் 3 பேர் காயம்
விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமிக்கு கடந்த 4-ந்தேதி பிறந்தநாள் நடைபெற்றது. இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் நகரில் பல பகுதிகளில் பேனர்கள் வைத்திருந்தனர். முதல் மந்திரியின் வீட்டிற்கு செல்லும் வழியில் வழுதாவூர் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.மேலும், சாலையில் அலங்கார வளைவு வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இரவு திடீரென்று அந்த வளைவு பேனர் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் சாலையில் சென்ற மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.