தொழிலாளி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

சிக்பள்ளாப்பூர் அருகே கூலி தொழிலாளி கொலை மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-02 21:09 GMT

கோலார் தங்கவயல்:-

தொழிலாளி கொலை

சிக்பள்ளாப்பூர் தாலுகா பேளூரு போலநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்மா(வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அலமேலம்மா(வயது 25) நவம்பர் 27-ந் தேதி நங்கிலி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவனை காணவில்லை. அவரை போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் நங்கலி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது நரசிம்மா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பேளூரு அருகேயுள்ள புதரில் அவரது உடல் கிடந்தது. அந்த உடலை போலீசார் கைப்பற்றினர். இது பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், மற்றும் சீனிவாஸ் என்பவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர்.

மனைவி உள்பட 3 பேர் கைது

இதையடுத்து போலீசார் அவர்கள் மீதான சந்தேகம் வலுத்தது, கிடிக்கிபிடி விசாரணை நடத்தியபோது, கள்ளக்காதல் விவகாரத்தில் நரசிம்மாவை கொலை செய்ததாக கூறினர். அதாவது வெங்கடேசிற்கும், நரசிம்மாவின் மனைவி அலமேலம்மாவிற்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த நரசிம்மா, இருவரையும் கண்டித்தார். இதனால் கோபமடைந்த அலமேலம்மா கணவன் நரசிம்மாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக வெங்கடேஷ், சீனிவாசின் உதவியை நாடினார். இதையடுத்து கடந்த 24-ந் தேதி 2 பேரும் சேர்ந்து நரசிம்மாவை வெளியே அழைத்து சென்று தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததாக தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக நங்கிலி போலீசார் வெங்கடேஷ், சீனிவாஸ் மற்றும் அலமேலம்மா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்