உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 3 பேர் கைது ரூ.14 லட்சம் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-27 18:45 GMT

உப்பள்ளி

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் தீரஜ். இவர் தொழில் அதிபர் ஆவார். தீரஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு காரில் வந்தார்.

அவர் காரை புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் தீரஜிடம் பேசினர்.

பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். அப்போது அந்த நபர்கள் தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.26 லட்சத்தை திருடி சென்றனர். பின்னர் காருக்கு தீரஜ் வந்தார். அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.26 லட்சத்தை காணவில்லை.

இதுகுறித்து தீரஜ் கோகுல்ரோடு போலீசில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.26 லட்சம் திருடிய வழக்கில் உத்தர கன்னடா மாவட்டம் முண்டுகோடு தாலுகாவை சேர்ந்த மஞ்சுநாத் (வயது40), பசவராஜ் (36), உலகப்பா பண்டாரி (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் கோகுல்ரோடு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்