திருட்டு வழக்கில் 3 பேர் கைது; ஆட்டோ, ஆயுதங்கள் பறிமுதல்

உடுப்பி அருகே, திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவா்களிடம் இருந்து ஆட்டோ, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-05 15:17 GMT

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் படுபித்ரி டவுன் போலீசார் நந்திக்கூர் சந்திப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் சந்தேகத்திற்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவை போலீசார் நிறுத்துமாறு கைகாட்டினர்.

ஆனால் ஆட்டோவில் வந்தவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், போலீஸ் வாகனத்தில் அவர்களை விரட்டி சென்றனர். படேபெட்டு பகுதியில் உள்ள கோவில் அருகே வைத்து ஆட்டோவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் ஆட்ேடாவில் இருந்த 3 பேர் இறங்கி தப்பிக்க ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பஜ்பே பகுதியை சேர்ந்த முகமது முனீர் (வயது 24), முகமது ஆாிப் என்ற முன்னா (37) மற்றும் அக்பர் (36) என்பதும், அவா்கள் அதே பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் புகுந்து நகை, பணம் மற்றும் பொருட்களை திருடி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோவையும், திருடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்