கொள்ளை வழக்குகளில் 3 பேர் கைது

உப்பள்ளி நகரில் கொள்ளை வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-09 18:45 GMT

உப்பள்ளி:-

உப்பள்ளி நகரில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உப்பள்ளி பென்டிகேரி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கங்காதரன் நகரை சேர்ந்த பரசுராம், மஞ்சுநாத் மற்றும் சுரேஷ் என்பது தெரிந்தது.

மேலும், அவர்கள் அந்த பகுதியில் நின்றுகொண்டு தனியாக வருபவர்களை குறிவைத்து மிரட்டி நகை, பணத்தை பறித்து வந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்