தம்பதியிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
மங்களூரு அருகே தம்பதியிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுனை சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்தநிலையில் அப்துல்லா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் உச்சிலா பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்த 3 பேர், தம்பதியை கத்தியை காட்டி மிரட்டி ஐபோன், மோட்டார் சைக்கிளை அங்கிருந்து திருடி விட்டனர். இதுகுறித்து அப்துல்லா, உல்லால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பஸ்திபட்புவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 27), சோமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்த முகமது உபைதுல்லா என்கிற உப்பி (33), உல்லால் மேலங்கடியைச் சேர்ந்த இப்ராகிம் கலீல் என்கிற கலீத் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஐபோன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.