ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கைது..!
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீ நகர்,
ஜம்மு காஷ்மீரின் குல்காமிலிருந்து சட்டவிரோதமாக சிலர் ஆயுதங்கள், வெடிபொருட்கள் எடுத்து செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தாதர்கோட் ஆலம்கஞ்ச் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் எடுத்து செல்வதை கண்டுபிடித்த போலீசார் முகமது அபாஸ் வாகே, கவுகர் ஷபி மீர், நிசார் ரஹ்மான் ஷேக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 3 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.