ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட...! ஒரே நேரத்தில் அம்மா, பாட்டி, மகள், மாமியார் கர்ப்பம்...?

கேரள ஜோடி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.

Update: 2023-03-25 06:23 GMT

கேரளாவில் ஜோடி ஒன்று நடத்தியுள்ள போட்டோஷூட் தான் தற்போது செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கர்ப்பகாலத்தை நினைவுகொள்ளும் வகையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜிபின் ஜாய், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி சிஞ்சுவுக்கு எப்படி மறக்கமுடியாத மகப்பேறு போட்டோ ஷூட்டை நடத்துவது எப்படி என்பது யோசித்து ஒரு திட்டமிட்டார்.

அவர் உருவாக்கிய இன்ஸ்டாகிராம் ரீலில், அவரது 87 வயதான தாத்தா ஜார்ஜ் சாக்கோ தனது 80 வயது மனைவி சின்னம்மாவின் நெற்றியில் முத்தமிடுவதைக் காணலாம். பாரம்பரிய சட்டையும், முண்டும் உடையணிந்து, வயிற்றைப் பிடித்துக் கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கிறார் சின்னம்மா.

அதுபோல் ஜிபின் ஜாய்- மற்றும் சிஞ்சுவுன் பெற்றோர், (ஜாய் ஜார்ஜ், 60, திரேசியம்மா ஜாய், 59, மற்றும் சாபு பிடி, 55, சுஜாதா சாபு 47) அவர்களும் குழந்தையை எதிர்பார்ப்பது போல் போஸ் கொடுத்தனர். அவர்களின் முகத்தில் உள்ள அன்பும், பாசமும், நன்றியுணர்வும் மனதைக் கவரும்.

கேரள ஜோடி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்