ஜார்கண்டில் 2-வது நாளாக முழு அடைப்பு: கிராமப்புறங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மாணவர் அமைப்புகள் சார்பில் ஜார்கண்டில் 2-வது நாளாக முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் கிராமப்புறங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-11 20:22 GMT

கோப்புப்படம்

ராஞ்சி,

ஜார்கண்டில் அரசு பணிகளில் உள்ளூர்வாசிகளுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பல்வேறு மாணவ அமைப்புகள் நேற்று முன்தினம் முதல் 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.

அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு நகர்ப்புறங்களில் பரவலான ஆதரவு காணப்பட்டது.

ராஞ்சியில் சந்தைகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் நேற்றும் திறக்கப்பட்டிருந்தன. மேலும் பயணிகள் வாகனங்கள் வழக்கம்போல இயங்கின. அதேநேரம், கிராமப்புறங்களில் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் முடங்கியது.

முழு அடைப்பையொட்டி தலைநகர் ராஞ்சியின் புறநகர் பகுதிகளில் மாணவர் அமைப்பினர் சாலைகளில் டயர்களை கொளுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தின. மேலும ராஞ்சி-பாட்னா தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டக்காரர்கள் இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இந்த போராட்டக்காரர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அத்துடன் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் நடந்த 2 நாள் முழு அடைப்பில் குறிப்பிடத்தக்க அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்