வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 280 குக்கர்கள் பறிமுதல்

கொப்பா அருகே வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 280 குக்கர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,.

Update: 2023-03-25 04:30 GMT

சிக்கமகளூரு-

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கட்சியினர் கொடுத்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்க நகை மற்றும் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகே உள்ள தெங்கினமனே கிராமத்தில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக குக்கர்கள் பதுக்கி வைத்து இருப்பதாக ஜெயப்புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதீஷ் என்பவரது பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 280 குக்கர்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், யுகாதி பண்டிகையையொட்டி காபி தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு வைத்துள்ளதாக சதீஷ் கூறினார். இதுகுறித்து ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்