இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனாவுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-17 03:52 GMT

புதுடெல்லி,

கொரோனா வைரசின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2019 ஆம் வருடத்தின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த கொரோனா வைரஸ் 2020 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்க பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு டெல்டா பிளஸ் என்ற இரண்டாவது மோசமான அலை உருவானது. இதில் தான் நிறைய உயிர்கள் பறிக்கப்பட்டது.

அதன் பிறகு 2021 ஆம் வருடம் ஓமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு மாறி அதனுடைய ஆட்டம் முடிவுக்கு வரத் தொடங்கியது. தற்போது இந்தியா முழுக்க எக்ஸ் பிபி.1.16 வகை வைரஸ் தான் மிக மிக வேகமாக பரவும் ஆற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது ஆறுதலான விஷயமாக மாறியது. இந்த வைரஸ் பாதித்தால் இரண்டு நாட்களிலேயே குணமாகிவிடும்.

இருப்பினும் கடந்த சில தினங்களாகவே இந்த வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பானது 12000 என்ற அளவில் இருக்கிறது. இது 50,000 என்று அளவிற்கு கூட உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிபுணர்கள் இதில் மாறுபட்டுள்ளனர். அதாவது மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் சுமார் பத்து நாட்களில் இந்த கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு இதனுடைய தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 

இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,35,772 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,141 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542 லிருந்து 60,313 ஆக உயர்ந்து உள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து உள்ளது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 19 ஆயிரத்து 848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக ஏப்ரல் 14ஆம் தேதி 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்