புதுச்சேரியில் பயங்கரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 பேர்! 22 பேர் கைது
புதுச்சேரியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரி மோகன் நகரில் உள்ள ஒரு வீட்டில், கடலூரைச் சேர்ந்த பாலாஜியும், அவருடைய மனைவி உமாவும் 16 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்ததை தன்வந்திரி காவல் நிலைய போலீசார் கண்டறிந்தனர்.
தம்பதியிடம் நடத்திய விசாரணையில், 25 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தம்பதி உள்பட 27 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலாஜி உள்ளிட்ட 22 பேரைக் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் உமா உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.