மராட்டியத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்து... 25 பேர் உயிரிழந்த சோகம்.!

அதிகாலை 2 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

Update: 2023-07-01 01:42 GMT

புல்தானா,

மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்தது.

பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை 2 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்