லே-அவுட் பணிகளுக்கு கூடுதலாக 245 ஏக்கர் நிலம்

பெங்களூருவில் லே-அவுட் பணிகளுக்கு கூடுதலாக 245 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-09 17:20 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் வளர்ச்சி ஆணையம் சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, லே-அவுட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது யஷ்வந்தபுரம் புறநகர் பகுதியில் சிவராம் கராந்த் லே-அவுட் அமைக்கும் பணியில் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தற்போது 3,200 ஏக்கர் பரப்பரளவில் லே-அவுட் பணிகள் நடந்துவரும் நிலையில் தற்போது கூடுதலாக 245 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி யஷ்வந்தபுரம் எல்லைக்கு உட்பட்ட சோமசெட்டிஹள்ளி, லட்சுமிபுரா, ஆவலஹள்ளி, மனஹள்ளி, வீரசாகரா உள்பட 13 கிராமங்கள் அரசின் கையகப்படுத்தும் எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் வீடுகள் குறித்த விவரங்களை வருகிற 14-ந்தேதிக்கு பிறகு பெங்களூரு மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். பணிகள் முடியும் பட்சத்தில் சுமார் 20 ஆயிரம் வீடுகளுடன் கூடிய லே-அவுட்டாக இது உருவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்