டெல்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக ஸ்வாதி மாலிவால் இருந்து வந்தார்.

Update: 2024-05-02 05:43 GMT

புதுடெல்லி,

டெல்லி மகளிர் ஆணையத்தில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்த வந்த 233 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு, டெல்லி ஆளுநர் சக்சேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவி ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி ஊழியர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகார் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்வாதி மாலிவால் தற்போது ஆம் ஆத்மி  கட்சியின் எம்.பி-யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக ஸ்வாதி மாலிவால் இருந்து வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்