விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் பெண் புலி உயிரிழப்பு
விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் பெண் புலி ஒன்று உயிரிழந்தது.
விசாகப்பட்டினம்,
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்கா உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைதொடர் அடிவாரத்தில் அமைந்துள்ள இதில் அரிய வகை வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்த பூங்காவில் ஜானகி என்னும் பெயர்கொண்ட புலியை பராமரித்து வந்தனர். 22 வயதான இந்த புலி நேற்று உயிரிழந்தது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்கோளாறு காரணமாக ஜானகி அவதிப்பட்டு வந்தது. அதனை பூங்கா நிர்வாகிகள், டாக்டர்களின் உதவியுடன் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் உணவு உட்கொள்வதை ஜானகி நிறுத்தி கொண்டது. இதனால் உடல் சோர்வு மற்றும் முதுமை காரணமாக ஜானகி பூங்கா வளாகத்திலேயே உயிரிழந்தது. அதனை டாக்டர்கள் உதவியுடன் பூங்காவில் புதைத்தனர்.