பீகாரில் ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேர் கடந்த 24 மணி நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி போஜ்பூரில் 5 பேர், ஜகனாபாத்தில் 4 பேர், ரோஹ்டாஸ் மற்றும் பாட்னாவில் தலா 3 பேர், தர்பங்கா மற்றும் நவாடாவில் தலா 2 பேர், மாதேபூர், கைமூர் மற்றும் அவுரங்காபாத்தில் தலா ஒருவர் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி நிதிஷ் குமார், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.