ஐஆர்சிடிசி ரெயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம் புதிய புக்கிங் முறை...!

உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் மூலமாக நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

Update: 2022-05-18 08:31 GMT
புதுடெல்லி

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஐஆர்சிடிசி  இணையதளம் அல்லது ஆப்-பைப் பயன்படுத்தி ரெயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை திருத்தியுள்ளது.

ஐஆர்சிடிசி-யின் புதிய விதிகளின் படி, அதன் ஆப் அல்லது இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள்  தங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கணக்கு ஆகியவற்றை ஒருமுறை வெரிபிகேஷன் செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெரிபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்களால் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஐஆர்சிடிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றமானது கொரோனா தொற்றுநோய் தொடங்கியது முதல் தற்போது வரை ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் வழியாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...

* முதலில் ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளத்திற்குள் லாகின் செய்யுங்கள்.

*  ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது இணையதளத்திற்குள் உள்ள வெரிபிகேஷன் விண்டோவை கிளிக் செய்யவும்.

* அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.

* இதனையடுத்து வலதுபுறத்தில் வெரிபிகேஷனுக்கான விருப்பத்தையும் இடதுபுறத்தில் எடிட் செய்வதற்கான பொத்தானையும் காண்பீர்கள்.

* அதன் பின்னர் மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு வந்த ஓடிபி விவரங்களை தனித்தனியே உள்ளிடவும். அதன் பின்னர் உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் மூலமாக நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

வெரிபிகேஷனுக்குப் பிறகு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

* முதலில் ஐஆர்சிடிசி (IRCTC) ஆப் அல்லது இணையதளத்திற்குள் லாகின் செய்யுங்கள்.

* புறப்படும் இடம், சேருமிடம், பயணத் தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.

3: அதன் பின்னர் தோன்றும் பட்டியலில் இருந்து சரியான ரயிலை தேர்வு செய்யுங்கள். அதனைத்தொடர்ந்து Book Now என்பதை கிளிக் செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.

* பயணியின் பெயர், வயது, பாலினம், பெர்த் விருப்பம் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.

* பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து டிக்கெட்டிற்கான தொகையை செலுத்தவும்.

செயல்முறை முடிந்ததும், பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்டது தொடர்பாகவும், பயண விவரங்களையும் ஐஆர்சிடிசி (IRCTC) குறுஞ்செய்தி மற்றும் மெயில் மூலம் தகவல் வரும்.

மேலும் செய்திகள்