கரீபியன் நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 நாட்கள் சுற்றுப்பயணம்

ஜமைக்கா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளில் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Update: 2022-05-15 00:08 GMT
புதுடெல்லி,

ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் உபரகரணங்கள் வழங்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை 7 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜமைக்கா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகிய இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். 

முதலில் ஜமைக்கா செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு சிறிய தீவுகளின் முன்னேற்றம் குறித்தும், கரீபியன் மக்களுடனான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

மேலும் செய்திகள்