திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாகா தேர்வு

பிப்லப் குமார் தேவ் ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-05-14 13:25 GMT
அகர்தலா, 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. முதல் மந்திரியாக  பிப்லப் குமார் தேப் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், திரிபுரா மாநில  முதல் மந்திரியாக  பிப்லப்குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  உள்கட்சி பூசல் காரணமாக பிப்லப்குமார் தேப் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், கட்சியை வலுப்படுத்த வேண்டிய பணி இருப்பதால் ராஜினாமா செய்ததாக பிப்லப் குமார் தேப் கூறினார். 

பிப்லப் குமார் தேவ் ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பாஜக எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக  மாணிக் சாகா தேர்வு செய்தனர். புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள  மாணிக் சாகாவிற்கு முன்னாள் முதல் மந்திரி பிப்லப் குமார் தேப்வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்