பாஜக ஆட்சியில் வகுப்புவாத கலவரங்கள் அதிகம் நடப்பது ஏன்? உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு டிஆர்எஸ் மூத்த தலைவர் கேள்வி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஒரு நாள் பயணமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுள்ளார்.

Update: 2022-05-14 11:43 GMT
ஐதராபாத்,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஒரு நாள் பயணமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுள்ளார்.

ஐதராபாத் வந்துள்ள அவரிடம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் முக்கிய தலைவர் கல்வகுந்த்லா கவிதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

டிஆர்எஸ் மூத்த தலைவர் கல்வகுந்த்லா கவிதா தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது:-

“பாஜக ஆட்சியில் வகுப்புவாத கலவரங்கள் அதிகம் நடப்பது ஏன்? பாஜக ஆளும் கர்நாடகாவில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தேசியத் திட்ட அந்தஸ்து வழங்கும் மத்திய அரசு, தெலுங்கானாவில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு இதையே மறுக்கிறது. இதன் மூலம் கபட நாடகம் செய்கிறது.

நிதி அமைச்சகத்தால் வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3000 கோடி எப்போது தெலுங்கானாவிற்கு வழங்கப்படும்?

விண்ணை முட்டும் பணவீக்கத்திற்கு உங்கள் பதில் என்ன? நாட்டில் சாதனை படைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு உங்கள் பதில் என்ன? 
பாஜக அரசாங்கத்தின் சொந்த தரவுகளின்படி, பாஜகவின் ஆட்சியின் கீழ் அதிகபட்ச வகுப்புவாத கலவரங்கள் நடைபெறுகின்றன, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில் விலை உயர்ந்த முன்னணி நாடாக இந்தியாவை உருவாகுகிறது, இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்