தீவைத்து கொண்டு வித்தியாசமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி
தங்களுக்கு தாங்களே தீவைத்து கொண்டு வித்தியாசமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி
புதுடெல்லி
ஹாலிவுட்ன் ஜோடி கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர். இவர்கள் இருவரும் ஸ்டண்ட் கலைஞர்கள். இருவரும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் காதலில் விழுந்தனர். இவர்கள் தங்கள்திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி உள்ளனர்.
இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் வைரலாகியது, அதை அவர்களின் திருமண புகைப்படக்காரர் ரஸ் பவல் வெளியிட்டார்.அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் மணமக்கள் தங்கள் முதுகின் பின்புறம் தீயை பற்றவைத்து கொண்டு வேகமாக நடந்து வருகின்றனர்.அவர்கள் நடந்துவர விருந்தினர்கள் அவர்களை உற்சாகபடுத்த கை தட்டி கொண்டு இருக்கின்றனர். தீ கொளுந்து விட்டு எரிகிறது. எரியும் நெருப்புக்கிடையே ஜோடி ஹாயாக நடந்து வருகிறது. பின்னர் நெருப்பு ஜோடி மண்டியைட்டனர். அங்கு தீயை அணைக்கும் கருவிகளைக் வைத்து இருக்கும் இருவர் தீயை அணைத்தனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.