இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒரே நாளில் 2,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று முன் தினம் 2,897 நேற்று 2,827 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,841 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,13, 413 லிருந்து 4,31,16,254 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,295 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,70, 165 லிருந்து 4,25,73,460 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,067லிருந்து 18,604 ஆனது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர் இதுவரை 5,24,190 பேர் உயிரிழந்தனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.