ஒடிசாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.133 கோடி சிக்கியது - அமலாக்கத்துறை சோதனையில் அதிரடி

அமலாக்கத்துறை அதிகாரிகளும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜிதேந்திர நாத் பட்நாயக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-05-12 20:33 GMT
புதுடெல்லி,

ஒடிசாவின் சம்புவா சட்டசபை தொகுதி முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஜிதேந்திர நாத் பட்நாயக் மீது சுரங்க முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பட்நாயக் உள்ளிட்டோர் நீண்ட காலமாக சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அரசுக்கு ரூ.130 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜிதேந்திர நாத் பட்நாயக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில் ரூ.133 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் ரூ.70 லட்சம் பணம் மற்றும் ரூ.133.17 கோடி மதிப்பிலான வங்கி டெபாசிட்டுகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்