“லட்சுமண ரேகையை தன்னிச்சையாக வரையறுக்கக் கூடாது” - கிரண் ரிஜிஜு கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

மத்திய சட்ட மந்திரி லட்சுமண ரேகையை தன்னிச்சையாக வரையறுக்க கூடாது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2022-05-12 17:47 GMT
புதுடெல்லி,

தேச துரோக சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, “நீதித்துறையும், அரசுத்துறையும் தங்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள லட்சுமண ரேகையை மீறக்கூடாது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தன்னிச்சையாக லட்சுமண ரேகையை வரையறுக்க மத்திய சட்ட மந்திரிக்கு அதிகாரம் இல்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்கள், சட்டப்புத்தகத்தில் இடம்பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்