மூன்று தலை பாம்புபோல் உருமாறி குஞ்சு பொரிக்கும் பட்டாம் பூச்சி வைரல் புகைப்படம்

அட்டாகஸ் அட்லஸ் உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும், மேலும் அவை இரண்டு வாரங்கள் மட்டுமே வாழ்கின்றன.

Update: 2022-05-10 06:25 GMT
புதுடெல்லி

சமூக வலைதளங்களில்  புதிதாக ஒரு புகைப்படம் வைரலாகி உள்ளது. அதனை  பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மூன்று தலை பாம்பு  போல் இருக்கும் புகைப்படம் ஆகும்.

ஒரு  சாதாரணமான ஒரு பட்டாம்  பூச்சி. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இதன் பெயர் அட்டாகஸ் அட்லாஸ்(Attacus Atlas).இதனை அட்லாஸ் மாத் என்று கூட அழைப்பர். பாம்பாக நிறமாறி  அவை குஞ்சு பொரிக்கும் வரை முட்டையிட்டு அவற்றைப் பாதுகாக்கும்.இந்த வகை பூச்சிகள் அதிக அளவில் ஆசியாவில் மட்டுமே காணப்படுவதாக கூறப்படுகிறது.

அட்டாகஸ் அட்லஸ் உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும், மேலும் அவை இரண்டு வாரங்கள் மட்டுமே வாழ்கின்றன.



மேலும் செய்திகள்