குஜராத்தில் 500 மருத்துவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

குஜராத்தில் 500 மருத்துவர்கள் பா.ஜ.க.வில் இன்று இணைந்தது அக்கட்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தது.

Update: 2022-05-08 16:38 GMT



காந்திநகர்,



குஜராத்தில் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்து வருகிறது.  3 தசாப்தங்களாக அக்கட்சி குஜராத்தில் ஆட்சி  செய்கிறது.  இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தலை குஜராத் சந்திக்க உள்ளது.

இதனை முன்னிட்டு தொண்டர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு தீவிரமுடன் கட்சி பணியாற்ற வேண்டும் என பா.ஜ.க. கேட்டு கொண்டுள்ளது.  இந்நிலையில், முதல்-மந்திரி தலைமையில் காந்திநகரில் 500 மருத்துவர்கள் பா.ஜ.க.வில் இன்று இணைந்தது அக்கட்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தது.

குஜராத்தில் 6வது முறையாக அக்கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது.  கடந்த முறை தேர்தலில் 182 தொகுதிகளில் 99 இடங்களை பா.ஜ.க.வும், 77 இடங்களை காங்கிரசும் கைப்பற்றின.  எனினும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 12க்கும் கூடுதலான எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசை விட்டு விலகி சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்