மத்தியபிரதேசத்தில் திருமண விருந்தில் சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

மத்தியபிரதேசத்தில் திருமண விருந்தில் சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-06 21:31 GMT
கோப்புப் படம்
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தின் பிந்த்ரை கிராமத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட விருந்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பி உள்ளனர். மணப்பெண்ணுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்