7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - வீட்டு வேலை செய்து வந்த நபர் கொடூர செயல்
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உடலை காட்டிற்குள் வீசிய சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டம் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தம்பதியின் வீட்டில் 25 வயது நிரம்பிய நபர் வீட்டு வேலை செய்துவந்தார்.
அந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இதனிடையே, நேற்று முன் தினம் இரவு அந்த தம்பதி தனது மகளுடன் ஊரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு வீட்டில் வேலை செய்து வந்த 25 வயதனான அந்த நபரையும் அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டு வேலைக்காரரிடம் தனது மகளை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், அந்த வேலைக்காரன் சிறுமியை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளான். அங்கு, அந்த சிறுமியை அவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். பின்னர் உடலை காட்டுப்பகுதியில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்துள்ளான்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து வீட்டு வேலைக்காரரிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்துள்ளனர். ஆனால், சிறுமி எங்கு சென்றார் என தெரியவில்லை என அந்த வேலைக்காரர் கூறியுள்ளார்.
உடனடியாக, இது குறித்து போலீசில் புகார் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சிறுமி கடைசியாக இருந்த வேலைக்காரரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக வேலைக்காரன் ஒப்புக்கொண்டான். இதனை தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் கொலை செய்து காட்டில் மறைத்து வைக்கப்பட்ட சிறுமியில் உடலை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.