2-18 வயதினருக்கான கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சோதனை - பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்
சோதனை முறையில் தடுப்பூசி செலுத்த தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி,
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 டோஸ்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்க்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அவசர கால அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சோதனையை நடத்த அனுமதி வழங்கக் கோரி, தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதற்கான ஆய்வக பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், 2 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசியை சோதனை முறையில் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.