டெல்லியில் புழுதிப்புயல் ஏற்படும்; மஞ்சள் அலெர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லியில் வெப்பம் சரசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியில் வெப்பம் சரசரி அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டெல்லியில் புழுதிப்புயல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிமீ வேகத்தில் இருக்கும். தலைநகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 28.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. எனினும், வெப்ப அலை ஏதும் கணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் மாதாந்திர சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன்மூலம், 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் டெல்லியில், இரண்டாவது அதிக வெப்பமான ஏப்ரல் ஆக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் டெல்லியின் மாத சராசரி வெப்பநிலை 36.30 டிகிரி செல்சியஸ் ஆகும்.