குஜராத்தில் 3 நாள் சுகாதார மாநாடு 5-ந் தேதி தொடங்குகிறது

ரோக்கியமான இந்தியாவுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவது ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

Update: 2022-05-02 23:32 GMT
புதுடெல்லி, 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயரிய ஆலோசனை அமைப்பு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல கவுன்சில். அதன் 14-வது மாநாடு குஜராத் மாநிலம் கேவடியாவில் நடக்கிறது. வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 3 நாட்களுக்கு இம்மாநாடு நடக்க உள்ளது. மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறைகள் தொடர்பான கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, அவற்றை சிறப்பாக அமல்படுத்துவது பற்றி பரிசீலிப்பதுதான் மாநாட்டின் நோக்கம் ஆகும். சுகாதார அமைச்சகம், நிதி ஆயோக், பிரபல பேச்சாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடன் குழு விவாதமும் நடைபெறும். அனைவருக்கும் மலிவான, சமமான மருத்துவம் கிடைப்பது, ஆரோக்கியமான இந்தியாவுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவது ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்