ரஷியா: ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் பலி, 6 பேர் காயம்

ரஷியாவில் எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-05-01 13:51 GMT
கோப்புப் படம்
மாஸ்கோ,

ரஷியாவின் மொகோச்சா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக இன்று எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று ரஷியாவின் டிரான்ஸ்பைகாலியா பிரதேசத்தில் உள்ள மக்லகான் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டு திரும்பியபோது மொகோச்சா நகரில் உள்ள விமானநிலையத்தில் கடுமையாக தரையிறங்கியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும் அவசர சேவைகள் தெரிவித்தது. ஹெலிகாப்டர், மக்லகான் கிராமத்திற்கு அருகே தீயை அணைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்ததாக டிரான்ஸ்பைகாலியா அரசாங்கத்தின் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்