கொச்சி: நடு கடலில் மூழ்கிய படகு: 6 பேரை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

லட்சத்தீவில் உள்ள அந்தோத் நோக்கிச் சென்ற படகு திடீரென கடலில் மூழ்கியது.

Update: 2022-05-01 10:43 GMT
image tweeted by @indiagoastguard
கொச்சி,

கோழிக்கோடில் உள்ள பேப்பூரில் இருந்து கால்நடைகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றுடன் ஆறு பேருடன் படகு ஒன்று லட்சத்தீவில் உள்ள அந்தோத் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக படகின் இஞ்சின் பகுதியில் கடல் நீர் புகுந்ததால், படகு மெதுவாக கடலில் மூழ்க தொடங்கியது. இதையடுத்து தகவல் அறிந்து கடலோர காவல் படையினர், உயிர் காக்கும் படகில் தவித்துக்கொண்டிருந்த ஆறு பேரையும் இன்று அதிகாலை 3 மணியளவில் பத்திரமாக மீட்டதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்