யூஜிசி - நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!!
நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி, https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், விண்ணப்ப திருத்தம் மே 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும், தேர்வு மையங்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரானா காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில், அந்த தேர்வும், நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள தேர்வும் ஒரே சமயத்தில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. ஆனால், தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை:-
Step 1: ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: முகப்புப் பக்கத்தில் (homepage) உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
Step 3: முதலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப தொடரவும்.
Step 4: தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களைப் பதிவேற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
Step 5: உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப்(confirmation page) பதிவிறக்கவும்.
Step 6: விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,100; பொது-EWS, OBC-NCL-க்கு ரூ.550 மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்கள் ரூ.275 செலுத்த வேண்டும்.