இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை - அசாதுதீன் ஓவைசி
இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர பல்வேறு மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை. கோவா சிவில் சட்டத்தின்படி, தனது மனைவி 30 வயதுக்குள் ஆண் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றால் இந்து மதத்தை சேர்ந்த ஆண் 2-வது திருமணம் செய்துகொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் தேவையில்லை என சட்ட கமிஷன் தனது கருத்தை தெரிவித்துள்ளது’ என்றார்.