டெல்லியில் மேலும் 1,520- பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 5.10 சதவிகிதமாக உள்ளது.

Update: 2022-04-30 15:39 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில்  1,520- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவில் இருந்து மேலும் 1,412 பேர் குணம் அடைந்த நிலையில்,  ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,716- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 5.10 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 29,775- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்